இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று (30) நள்ளிரவு முதல் பெற்றோல்
விலைகளைக் குறைத்ததைத் தொடர்ந்து, லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் (LIOC) தனது
எரிபொருள் விலைகளைத் திருத்தியமைத்துள்ளது.
இதற்கமைய, ஐ.ஓ.சி
நிறுவனம் ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 15 ரூபாவால்
குறைத்துள்ளதுடன், அதன் புதிய விலை 399 ரூபாவாகும்.
ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலையும் 20 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 475 ரூபாவாகும்.
ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளாமல் இருக்க அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதனிடையே,
சினோபெக் (Sinopec) நிறுவனமும் நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு
வரும் வகையில் தனது பெற்றோல் விலைகளை திருத்தியமைத்துள்ளது.
இதற்கமைய,
சைனோபெக் நிறுவனத்தின் ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 15
ரூபாவால் குறைக்கப்பட்டு 399 ரூபாவாகவும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர்
ஒன்றின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு 475 ரூபாவாகவும்
குறைக்கப்பட்டுள்ளது.





