வரதன்
EL NiNO தாக்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அதிக உஷ்ட நிலை வரட்சி காரணமாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் அமைச்சர் சுனில் கந்துன் நெத்தி நிகழ்நிலை ஊடாக கலந்து கொண்டு முன்னெடுக்கப்பட வேண்டிய முற் பாதுகாப்பு நடவடிக்கைகள் சம்பந்தமாக அரசாங்க அதிபர் தலைமையில் இன்று மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் விசேட கூட்டம் ஒன்று இடம் பெற்றது.
மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சனை விவசாய நடவடிக்கைகளுக்கு நீர் இணை பெற்றுக் கொள்ளுதல் அதிக உஷ்ணத்தினால் பரவக்கூடிய தொற்ற நோய்கள் பற்றியும் அதிக உஷ்ணத்தை தாங்கக்கூடிய நிழல் மரங்களை நாட்டுதல் உணவு பழக்க வழக்கம் என பலதரப்பட்ட விடயங்கள் இங்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர் ஏ. எஸ். எம்.சியாத் அவர்களினால் விரிவான விளக்கங்கள் இங்கு வழங்கி வைக்கப்பட்டது
பாதுகாப்பு உயர் அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள் விவசாய மற்றும் கம நல அபிவிருத்தி திணைக்களத் தலைவர்கள் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் பிரதேச சபைகளின் செயலாளர் என பலரும் இந்த விசேட கூட்டத்தில் கலந்து கொண்டனர்











