தமிழ்பேசும்
மக்களின் நலன்களை முன்னிறுத்தி ஒன்றிணைந்து செயற்படத் தீர்மானித்துள்ள
முக்கிய தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதி
அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இலங்கை
தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர்
காங்கிரஸ், இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி
மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய 6 தமிழ்பேசும் கட்சிகளின்
பிரதிநிதிகளே இச்சந்திப்பில் பங்கேற்றனர்.





