தேசிய லொத்தர் சபையினால் மட்டக்களப்பு மாவட்ட விற்பனையாளர்களுக்கான காப்புறுதி திட்ட உறுதி பத்திரம் வழங்கும் நிகழ்வு












வரதன்


 தேசிய ரீதியில் அரசாங்கத்தினால் வீதி ஓரங்களில் விற்பனை செய்யும் விற்பனையாளர்களின் பாதுகாப்பு நலனை   கருத்தில் கொண்டு இத்திட்டம் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் அங்குர்பணம் செய்து வைக்கப்பட்டது 

தேசிய லொத்தர் சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் S. சிவ காந்த் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியம் கலந்து கொண்டு 

மாவட்டத்தில் முதற்கட்டமாக தெரிவு செய்யப் பட்டவர்களுக்கான காப்புருதி திட்டத்திற்கான உறுதி பத்திரங்களை விற்பனை யாளர்களுக்கு வழங்கி வைத்தார்

 இன்றைய இந்த நிகழ்விற்கு  காப்புருதி நிறுவன பிரதிநிதிகள் மாவட்ட விற்பனை முகவர்கள் விற்பனை ஆளர்கள் என பலரும் இன்றைய இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்

 தேசிய ரீதியில் ஐந்தாவது நிகழ்வாக  மட்டக்களப்பு மாவட்ட இன்றைய நிகழ்வு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது

 இதேவேளை அரசாங்கத்தினால்  விற்பனையாளர்களின் நலன் கருதி திடீர் அனர்த்த மரண காப்பருதி மற்றும் பாரிய நோய்களுக்கான காப்புருதி திட்டங்களும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்