மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் எல்-நினோ தொடர்பில் விசேட விழிப்புணர்வு கருத்தரங்கு













தற்போது உலகளாவிய ரீதியில் பேசுபொருளாக இருக்கின்ற எல்-நினோ (El-nino) காலநிலை, அதனால் ஏற்படப்போகும் மாற்றங்கள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் பிரதேச மட்ட அரச திணைக்களங்களின் அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தும் விழிப்புணர்வு கருத்தரங்கானது பிரதேச செயலாளர் திரு உ.உதயஸ்ரீதர் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக புவியியல் பிரிவு சிரேஸ்ட விரிவுரையாளர் திரு. கிருபா ராஜரெட்ணம் அவர்கள் கலந்துகொண்டு எல்-நினோ காலநிலை தொடர்பான விடயங்களை தெளிவுபடுத்தினார்.

இதன்போது எல்-நினோ நிலைமை ஏற்படும் விதம், அதனால் ஏற்படும் பாதிப்புகள், எதிர்காலத்தில் எதிர்நோக்கப்படுகின்ற விளைவுகள், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டிய தெளிவு நிலைகள், இதிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடைமுறைகள் போன்ற தெளிவூட்டல்கள் குறித்த கருத்தரங்கின் மூலம் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி சத்யகெளரி தரணிதரன், பிரதேச மட்ட அரச திணைக்களங்களின் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.