ப. ஸ்ரீஹரன். கோட்டைகல்லாறு மண்ணில் கண்ணகியம்மன் கோயில் ஆனது ஒரு இயற்கை எழில் கொஞ்சம் வகையிலும் நான்கு புறமும் நீரினால் சூழப்பட்ட ஒரு தீவு போன்ற ஒரு அமைப்பில் உள்ள ஊரினுள் மத்தியில் அமைப்பு பெற்று விளங்குகின்றது.இ க் கோயில் ஒரு பெரிய வளாகத்தினுள் அமைக்கப்பட்டு காணப்படுகின்றது. இக் கோயில் உள்ள வளாகத்தினுள் ஒரு பிள்ளையார் ஆலயமும் உள்ளது. கண்ணகி கோயில் வருடம் தோறும் வைகாசி மாதத்திலேயே ஆரம்பமாகும். கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் கோயில் ஆரம்பமாகும் முன்னதாகவே சித்திரை மாதம் போர் தேங்காய் அடியானது இடம்பெறுவது வழக்கமாகும். போர் தேங்காய் அடி நிகழ்வில் வடசேரி தென்சேரி என பிரிக்கப்பட்டு வடசேரி பிள்ளையார் பக்கம் தென்சேரி கண்ணகி அம்மன் பக்கமுமாக இடம் பெறுவதுண்டு. போர் தேங்காய் அடி முடிவுற்ற பின்னரான நாட்களில் இருந்து கண்ணகி அம்மன் கோயில் வேலைப்பாடுகள் ஆரம்பமாகிவிடும். கண்ணகி அம்மன் கோயிலினை ஆலய வண்ணக்கர் கணக்குப்பிள்ளை உள்ளடங்களாக 12 குடி மக்கள் மற்றும் 12 குடி தலைவர்கள் அதோடு ஏனைய மக்கள் ஆகியோர் சேர்ந்து வருடம் தோறும் கண்ணகி அம்மன் கோயிலினை சிறப்பாக செய்து முடித்து வருகின்றனர். இந்த கண்ணகி அம்மன் கோயிலில் பூசாரிய விளங்குபவர் கட்டாடி என்று அழைக்கப்படுகின்றார். கோயிலில் பூசை செய்பவர் தலைமுறை தலைமுறையாக பின்பற்றப்பட்டு வருகின்ற பாரம்பரிய விதிகளையும் நடைமுறைகளையும் சடங்கு சம்பிரதாயங்களையும் பேணி வருகின்ற ஒருவராகவே திகழ்க்கூடியவராக விளங்குகின்றார். முதலில் கோயில் கதவு திறக்கப்பட்டு பூசகர் மாத்திரம் ஒரு குத்துவிளக்குடன் உள் சென்று விளக்கினை ஏற்றுவார். பின்னர் பூசாரி, கோயிலின் உடைய அறங்காவலர்கள் அம்மனின் உடைய அறையினை துப்பரவு செய்து அலங்கார படுத்துவார்கள். அதன் பின்னராக ஏற்கனவே செய்து வைத்திருக்கின்ற கல்யாண கால் நாட்டு கின்ற வைவகம் இடம் பெறும் ஏனைய கண்ணகியம்மன் கோவில்களைப் போன்று வருடந்தோறும் கல்யாணகால் வெட்டுகின்ற நிகழ்வு அல்லாமல் மாறாக ஏற்கனவே செய்து வைத்திருக்கின்ற கல்யாண கால்களை வைத்துக்கொண்டு அவர்கள் கல்யாண கால்களை நாட்டுவர். பூஜை இடம் பெறுகின்ற அனைத்து வேலைகளிலும்இவ் கல்யாண காலுக்கும் பூசையானது இடம்பெறுவது வழக்கம். கண்ணையம்மன் சடங்கு இடம் பெறும் அனைத்து வேளைகளிலும் முதலில் மாரி, காளி வைரவர்,பேச்சி தெய்வங்களினுடைய ஆகிய பந்தல்களிலும் மற்றும் ஐம்பூதங்களின் பந்தல்களிலும் அத்துடன் ஏழு கன்னிமார்களின் உடைய பந்தல்களிலும் பூசையானது இடம்பெற்ற பின்பு ஒப்புதல் பெற்ற பின்னரே அம்மனுக்கு பூசை இடம்பெறும். சடங்கு காலங்களில் ஒரு நாளில் அம்மனுக்கு இரண்டு வேளை சடங்கு இடம்பெறும். அப்போது வழக்குரை காவியமானது பாடப்படும். அதன் பின்பு கல்யாண காலினை சுற்றி கன்னிப் பெண்கள் ஆலாத்தி எடுத்துகின்ற நிகழ்வும் இடம்பெறும் அவ்வாறான இந்நிகழ்வின் அப்போது கல்யாண கால் சுற்றும் காவியம் பாடப்படும். ஒவ்வொரு சடங்கு பூசைகளின் போது பறை மற்றும் உடுக்கு சங்கு போன்ற இசைக்கருவிகளில் நாதமும் ஒலிக்கும். பூஜை ஆனது நிறைவு பெற்ற பின்பு பூசகரின் மூலம் பக்த அடியார்களுக்கு பூவானது வழங்கப்பட்டு பூசகரின் மன்றாட்டுடன் அனைவரும் பூவினை அம்மனுக்கு சமர்ப்பிப்பர். அதன் பின்பு பிரசாதங்கள் பக்த அடியார்களுக்கு வழங்கப்படும். அத்துடன் நின்றுவிடாமல் தினமும் கண்ணகியின் உடைய வழக்குரை கதையானது பிள்ளையார் காப்புடன் ஆரம்பிக்கப்பட்டு தினமும் பாடப்படும். சடங்கு ஆரம்பித்து நான்காம் நாள் அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் இடம்பெறும். இதன் போது முதலித்தேவவன் குடி மக்களின் மூலம் கல்யாண பெட்டிகள் கொண்டுவரப்பட்டு அம்மனுக்கு தாலி கட்டி திருக்கல்யாணம் இடம்பெறும். இந்த திருக்கல்யாண நிகழ்வின் போது திருக்கலியான படிப்பும் பாடப்படும். மறுநாள் ஆறுகாட்டியா குடி மக்களின் மூலம் தாலி அறுக்கின்ற நிகழ்வு இடம்பெறும். கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் கோயிலானது ஒட்டுமொத்தமாக ஆறு நாள் சடங்குகள் இடம்பெறும் இறுதி நாள் அன்று பெண்கள் மடிப்பிச்சை ஏந்தி வந்து கோயிலுக்கு தானமாக கொடுக்கும் வைபவமும் இடம் பெறும். பின்னர் மாலை வேலைகளில் அம்மனுக்கு சாத்துவதற்கான பாலை ஏல விற்பனைக்காக விடப்படும். அதன் பிறகு விநாயகர் பானை வைக்கப்பட்டு பொங்கல் பொங்கப்பட்டு அம்மனுக்கு படைக்கப்படும் அதன்பிறகு அம்மனுடைய வழக்குரை கதையானது முடிக்கப்பட்டு ஏடானது கட்டுகின்ற நிகழ்வும் இடம்பெறும். இறுதியாக அம்மனுக்கு இறுதி நாள் பூசையானது இடம்பெற்று பன்னிரண்டு குடிகளில் இரு குடி சார்ந்து இரண்டு பிரதிநிதிகள் அம்மனின் உடைய திருகுளுத்தியினை பாடி முடிப்பர். அத்துடன் அம்மன் உள் வீதி வளம் வந்து செல்லும் இறுதியாக வாழி பாடப்பட்டு திருக்கதவு அடைக்கப்படும்.

.jpeg)















