உரிய கல்வித் தகுதிகளைப் பூர்த்தி செய்யாதிருந்த நிலையில், யோஷித ராஜபக்ஷவை கடற்படையில் உயர் பதவியொன்றிற்கு இணைத்துக்கொண்டமை மற்றும் அரசாங்கப் பணத்தைச் செலவிட்டு அவரை பிரித்தானிய அரச கடற்படையின் சிறப்புப் பயிற்சியொன்றிற்கு அனுப்பி வைத்தமை தொடர்பில், லஞ்ச அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.





