செஞ்சோலைத் துயருக்கும் காணாமல் போன குடும்பங்களுக்கும் புது வாழ்வு காணியுடன் 50 இலட்சம் வழங்கி வைத்தார் அமைச்சர்

 

 


 

 செஞ்சோலை துயர சம்பவத்தில் பாதிப்புக்குள்ளான 18 நபர்களுக்கும், காணாமல் போனவர்களின் 3 குடும்பங்களுக்கும் புதிய வீடுகள் அமைப்பதற்காக தலா 50 இலட்சம் ரூபாய் பணமும், அரை ஏக்கர் காணியும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கான முதற்கட்ட நிதியை கிளிநொச்சி - பரந்தன் பகுதியில் அமைந்துள்ள பயனாளிகளுக்கு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேரில் சென்று வழங்கி வைத்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், அவர்களுக்கு நிரந்தர வீட்டு வசதியை ஏற்படுத்தித் தரவும் அரசாங்கத்தால் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.