கிழக்கு மாகாண மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையினை வழங்கும் முகமாக அரசாங்கத்தில் தொடர்ச்சியான அபிவிருத்தி திட்டப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது இதேவேளை
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இதயநோய் சிகிச்சைப் பிரிவு மற்றும் நோயாளர் விடுதியின் திறப்பு விழா இன்று நண்பகல் வைத்தியசாலை வளாகத்தில்
வைத்தியசாலையின் திட்டமிடல் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற நடைபெற்றது
இந்த நிகழ்வில் வைத்தியசாலையின் சிரேஸ்ட இருதய நோயியல் நிபுணர் டாக்டர் அருள்நிதி மற்றும் வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர்கள், வைத்திர்கள்,தாதியர்கள் கலந்துகொண்டு புதிய பிரிவினை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தனர்.
ஆண்கள்,பெண்கள் பிரிவுகளாக இந்த விடுதி திறக்கப்பட்டுள்ளதுடன் இங்கு நவீன வைத்திய உபகரணங்கள் கொண்டு நோயாளர்கள் பராமரிப்பதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன
இதயநோயியல் சிகிச்சைப்பிரிவு அமைவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வந்த வைத்தியசாலையின் சிரேஸ்ட இருதய நோயியல் நிபுணர் டாக்டர் அருள்நிதி வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் சமூகத்தினால் இங்கு கௌரவிக்கப்பட்டார்.
மட்டு வைத்தியசாலையின் இதயவியல் நோயாளர்களுக்கான நீண்ட நாள் தேவையாக இருந்து வந்த நிலையில் வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஆர் முரளீஸ்வரன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.



.jpeg)









