மட்டக்களப்பு காயாங்கேணியில் ரூ. 4 மில்லியன் செலவில் நவீன மீன் விற்பனை நிலையம்: நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தொடக்கி வைத்தார்!

 




காயாங்கேணி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நவீன மீன் விற்பனை நிலையம் (Fish Market) அமைக்கும் பணிகள், நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கந்தசாமி பிரபு தலைமையில் இன்று (திங்கட்கிழமை) உத்தியோகபூர்வமாகத் தொடக்கி வைக்கப்பட்டன.

பிரஜாசக்தி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட சுமார் 4 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் இந்த நவீன மீன் விற்பனை நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இப்பணிகளைச் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாகத் தொடக்கி வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அங்கு உரையாற்றுகையில்;

"காயாங்கேணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும், உள்ளூர் மீனவர்கள் தங்களின் மீன்பிடிப் பொருட்களைச் சுகாதாரமான முறையில் விற்பனை செய்வதற்கும் இந்த புதிய மையம் பெருமளவில் உறுதுணையாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர், உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள், பிரஜாசக்தி அமைப்பின் உறுப்பினர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.