திருகோணமலை பாடசாலை ஒன்றின் 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகதிவுல்வெவ தேசிய பாடசாலையில் இன்று (06) காலை இடம்பெற்ற திடீர் குளவிக்கொட்டுச் சம்பவத்தில் 30 மாணவர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலைக் கட்டடத்தில் இருந்த குளவிக் கூடு கலைந்தமையினால் மாணவர்கள் இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த மாணவர்கள் சிகிச்சைக்காக மஹதிவுல்வெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் மூன்று மாணவிகள் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.





