நாடளாவிய ரீதியில் 55 பல்கலைக்கழக மாணவர் விடுதிகளை நிர்மாணிக்கும் தேசிய திட்டத்தின் கீழ், முதலாவது மாணவர் விடுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வரும் ஓகஸ்ட் 22ஆம் திகதி சனிக்கிழமை வவுனியா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெறவுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களின் நீண்டகால தங்குமிடப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இத்திட்டத்தின் ஊடாகப் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதுகாப்பான மற்றும் வசதியான தங்குமிட வசதிகளைப் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





