மட்டக்களப்பு மாமாங்கக் கோவில் முன்றிலில் இன்று 2026.08.06 இரவு "ஆளுமையாள் ஔவை" வடமோடி நாட்டுக்கூத்து அரங்கேற்றம்!

SIVAKUMAR

வரலாற்றுச் சிறப்புமிக்க மாமாங்கப் பிள்ளையார் கோவிலின் 2026-ஆம் ஆண்டுக்கான தீர்த்தக்கரைத் திருவிழாவை முன்னிட்டு, கிழக்குச் கலாசாரத்தின் பொக்கிஷமான பாரம்பரிய அரங்க விழா கோலாகலமாக நடைபெறவுள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையின் வழிகாட்டலில், மட்/ கல்லடி ஸ்ரீ சித்திவிநாயகர் அறநெறிப் பாடசாலையும் அன்புநெறிக்கலை மன்றமும் இணைந்து வழங்கும் “ஆளுமையாள் ஔவை” எனும் வடமோடி நாட்டுக்கூத்து அரங்கேற்றம் இன்றைய தினம் (06.08.2026 - வியாழக்கிழமை) இரவு 8.00 மணிக்கு மாமாங்கக் கோவில் முன்றிலில் இடம்பெறவுள்ளது.

ஓய்வுநிலை அதிபர் திருமதி. தே. அருட்ஜோதி அவர்களின் தயாரிப்பிலும், கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறை விரிவுரையாளர் கௌரீஸ்வரன் அவர்களின் நெறிப்படுத்துதலிலும், அண்ணாவியார் சி. ஞானசேகரன் பங்களிப்புடனும்   உருவாகியுள்ள இந்நாட்டுக்கூத்து, எமது பண்பாட்டையும் மரபையும் பறைசாற்றும் வகையில் மேடையேறவுள்ளது.

தமிழ் மண்ணின் மரபுவழி அரங்கக் கலையை நேசிக்கும் அனைத்துக் கலைப் பிரியர்களையும், அடியார்களையும், பொதுமக்களையும் இக்கலை நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றோம்.