ஆடி கிருத்திகை முன்னிட்டு மட்டக்களப்பு திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற பால்குட பவனி 1008 சங்கா ஆபிஷேக நிகழ்வு











 

 வரதன்

 



இந்துக்களின் வாழ்வில் ஆடி மாசம் மிகவும் சிறப்பு பெற்ற  மாதமாக  காணப்படுகிறது ஆடி அமாவாசை கதிர்காமம் புனித பாதயாத்திரை ஆடிப்பூரம் என முருகப்பெருமானுக்கு அம்மனுக்கும் சிறப்பு வழிபாடுகளுக்கு உகந்த மாதமாக இந்துக்களுக்கு காணப்படுகின்றது

 இதேவேளை ஆடி கிருத்திகை முன்னிட்டு இன்று மட்டக்களப்பு  திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இன்று(07.08.2026) ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சபரீஸ்வர சைதன்ய குருக்கள் தலைமையில் இடம்பெற்றது

 இன்று காலை மட்டக்களப்பு கல்லடி பேச்சி அம்மன் ஆலயத்தில் இருந்து நாதஸ்வர  மேல வாத்தியங்கள் முழங்க  பேரணியை அலங்கரிக்க அதிக அளவிலான பெண் அடியார்கள் மஞ்சள் நிற ஆடை அணிந்து விரதம் இருந்து மட்டக்களப்பு பிரதான வீதிகளூடாக பால்குடைப்பவனில் கலந்து கொண்டு திருச்செந்தூர் முருகன் ஆலய வரை கால்நடையாக தலையில் பால் குடத்தை ஏந்தி ஆலயத்தை வந்தடைந்ததும்

 அங்கு 1008  சங்கா அபிஷேகங்கள் வழிபாடுகள் இடம் பெற்றதன் பின்பு முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் இடம்பெற்றதுடன் ஆடி கிருத்திகை முன்னிட்டு விசேட பூஜைகளும் தாக சாந்தி நிகழ்வுகளும் இங்கு இடம் பெற்றது