சிறுவர்களை வேலைக்கு அமர்த்தினால் 100000.00 அபராதம் .

 


 
 
இலங்கையில் சிறுவர் உழைப்பு தொடர்பான குற்றங்களுக்கான அபராதத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து 100,000 ரூபா வரை 10 மடங்காக அதிகரிப்பதற்கான புதிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) உடன்படிக்கைகளுக்கு அமைவாக நாட்டின் சட்டங்களை புதுப்பிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
​தற்போது நடைமுறையிலுள்ள தண்டனைத் தொகைகள் குற்றங்களைத் தடுப்பதற்கு போதுமானதாக இல்லை என்பதால், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை பணியில் அமர்த்துவது மற்றும் ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்துவது போன்ற விதிமீறல்களுக்கு எதிரான தண்டனைகளை கடுமையாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.