இரத்மலானை விமானப்படை தளத்தில் நேற்று (15.07.2026) பயிற்சியில் ஈடுபட்டிருந்த Y-12 வகை விமானத்தில் பட்டத்தின் நூல் சிக்கியதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அந்த விமானம் மீண்டும் இரத்மலானை விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
விமான நிலையங்கள் மற்றும் ஓடுபாதைகளுக்கு அருகில் பட்டம் விடுவது விமானப் பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலாகும். உலகளவில் பல விமான விபத்துகளுக்கும் இதுபோன்ற செயல்கள் காரணமாக இருந்துள்ளன.
ஒரு பட்டம்... நூற்றுக்கணக்கான உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.
விமான நிலையங்கள் மற்றும் ஓடுபாதைகளுக்கு அருகில் பட்டம் விடுவதைத் தவிர்ப்போம். விமானப் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்வோம்.





