கொலை குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு 15 வருடங்களுக்கு பின் மரணதண்டனை

 


எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர் நீதிமன்றம் இருவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

சுமார் 15 ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி ருசிரா வெலிவத்த இன்று அறிவித்தார்.

முதல் குற்றவாளியான வஹும்புரகே திலக் புஷ்ப குமார மற்றும் இரண்டாம் குற்றவாளியான வீரதுங்க சமிந்த ஆகியோருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

 கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, தண்டனைச் சட்டத்தின் 296-வது பிரிவின் கீழ் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.