மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தின் ஹெரிடேஜ் மனிதநேய பிரிவினரால் வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவுக்கு அத்தியாவசிய மருந்து வகைகளும், மின்விசிறிகளும் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர். முரளீஸ்வரன் தலைமையில் இந்த உதவிப் பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் மைதிலி பாத்லட், மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தின் ஹெரிடேஜ் மனிதநேய பிரிவின் தலைவர் ஜீ. மோகனராஜ், சர்வதேச லயன்ஸ் கழகம் 306 D10 இன் பிராந்திய தலைவர் எம். சுதாகரன், மாவட்ட ஆளுநரின் பிரதம நிகழ்ச்சி இணைப்பாளர் சடாச்சரராஜா மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கணக்காளர், வைத்திய அதிகாரிகள், ஹெரிடேஜ் மனிதநேய கழக உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு பொருட்களை அதிகாரப்பூர்வமாக கையளித்தனர்.

-Edited.jpg)
-Edited.jpg)
-Edited.jpg)
-Edited.jpg)
-Edited.jpg)



-Edited.jpg)
-Edited.jpg)
-Edited.jpg)







-Edited.jpg)
-Edited.jpg)





