, மட்டக்களப்பு-தன்னாமுனை மட்/சென். ஜோசப் கல்லூரியில் O/L இல் சித்தி பெற்று A/L கல்விக்குத் தெரிவான மாணவர்களுக்கு கௌரவிப்பு விழா







 

 













 











பழைய மாணவர் சங்கம் செயலாளர் 
ம. சூசைதாசன் JP

மட்/சென். ஜோசப் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டிலும், கல்லூரி அதிபரின் வழிகாட்டலிலும், 1998 ஆம் ஆண்டு O/L பழைய மாணவர் குழுவின் முன்னெடுப்பில் கௌரவிப்பு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

2025 ஆம் ஆண்டு G.C.E. O/L பரீட்சையில் வெற்றி பெற்று A/L கல்வியைத் தொடரத் தகுதி பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில், அவர்களுக்கு நினைவுக் கேடயங்களும் கல்விப் புத்தகங்களும் வழங்கப்பட்டன. மேலும், மாணவர்கள் மேள வாத்திய இசையுடன் கௌரவத்துடனும் அழைத்து வரப்பட்டமை நிகழ்விற்கு மேலும் சிறப்புச் சேர்த்தது.

மாணவர்களின் எதிர்காலக் கல்விப் பயணத்திற்கு உற்சாகமூட்டும் இந்த அர்த்தமுள்ள நிகழ்வு அனைவரின் பாராட்டையும் பெற்றது.

இந்த உயரிய முயற்சியை முன்னெடுத்து, மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்த 1998 ஆம் ஆண்டு O/L பழைய மாணவர் குழுவினருக்கும், இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பழைய மாணவர் சங்கத்திற்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

«"ஒரு பழைய மாணவர் தனது பாடசாலைக்கு வழங்கும் மிகப் பெரிய பரிசு பணம் அல்ல; அடுத்த தலைமுறையின் கனவுகளுக்கு அளிக்கும் ஊக்கம்தான்."»