கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தின் Luggage Belt அருகில் கைவிடப்பட்டிருந்த, 1 கோடியே 12 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு தயாரிப்பு சிகரெட்டுகள் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன.
நேற்று காலை 08:45 மணிக்கு துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-650 இலக்க விமானம் மூலம் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சுங்க அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
4 பயணப் பொதிகளில் பொதி செய்யப்பட்ட நிலையிலேயே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இவற்றில், வெளிநாட்டு தயாரிப்பான "மென்செஸ்டர்" (Manchester) ரகத்தைச் சேர்ந்த 75,200 சிகரெட்டுகள் அடங்கிய 376 சிகரெட் கார்ட்டன்கள் இருந்தன.
துபாயிலிருந்து வந்த எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-650 இலக்க விமானம் மூலம் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகம்.
376 கார்ட்டன்களில் அடைக்கப்பட்ட 75,200 சிகரெட்டுகள்.
விசாரணை: இச்சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்க அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





