.
.jpeg)
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் பணிப்பாளர் டாக்டர். ஆர். முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில் அலுவலக உத்தியோகத்தர்களுக்கு "தேசிய விபத்து வாரத்தை" முன்னிட்டு அன்று விபத்துக்களை தடுப்பதற்கான விழிப்புனர்வு நிகழ்ச்சி ஒன்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் 6.7.2026 அன்று நடாத்தப்பட்டது.
இதில் வீட்டில்
ஏற்படும் விபத்துக்களை தடுக்கக்கூடிய பரிசீலனை படிவம் (check list)
வழங்கப்பட்டதுடன் இதன் மூலம் வீடுகளில் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க
முடியும் என்றும், அதைத் தொடர்ந்து, இலங்கையிலும்,
மட்டக்களப்புமாவட்டத்திலும் , ஏற்பட்ட விபத்து சம்மந்தமான புள்ளி
விவரங்கள் காண்பிக்கப்பட்டதோடு அதனுடைய பாதிப்புகள், என்பன முழுமையாக
எடுத்துரைக்கப்பட்டது. காணொளித் துணுக்கு (video clip) மூலமாக இலங்கையில்
நடை பெற்ற விபத்துக்கள் காட்சிப் படுத்த பட்டு
இவற்றை எவ்வாறு தடுப்பது
என்பது பற்றி தொற்றா நோய் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர். எம்.
ருதேஷன் அவர்களினால் தெளிவு படுத்தப்பட்டது.
.jpeg)



.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)






.jpeg)


.jpeg)





