டிக்வா புயலினால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு சிறிய நடுத்தர வியாபாரிகளுக்கான நிதியுதவிகள் வழங்கி வைப்பு



 

 










வரதன்

 

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட  மன்முனை  வடக்கு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட சிறிய நடுத்தர வியாபாரிகள் வணிக நிலையங்கள் மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பத்தினர் காண நிதியுதவிக் காசோலைகள் வழங்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் மன்முனை  வடக்கு பிரதேச செயலக  மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி V. சிவப்பிரியா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு கலந்துகொண்டு தெரிவு செய்யப்பட்ட 13 பயனாளிகளு க்கு 1 லட்சம் ரூபா பெருமதியான காசோலைகளை வழங்கி வைத்தார்

 
இந்நிகழ்வில் இப்பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி சுதா சுதாகரன் அரச அதிகாரிகள்  தேசிய மக்கள் சக்தியின் மட்டு மாநகர சபையின்   உறுப்பினர்களான A.துதிஸ்கரன் மற்றும் S. உதயகுமார் பயனாளிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்