மட்டக்களப்பு வாகரை பிரதேசத் சிறுவர்களை ஆரோக்கியமான எதிர்கால சமூகத்தினையும் சந்ததிகளையும் உருவாக்கும் திட்டம் - ஏர்ன் சிலோன் நிறுவன அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

 

 
















 

 மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் படித்த மற்றும் தன்னம்பிக்கை கொண்ட சிறுவர்களை புதிய அணுகுமுறைகள் ஊடாக உருவாக்கி அவர்கள் மூலம் ஆரோக்கியமான எதிர்கால சமூகத்தினையும் சந்ததிகளையும் உருவாக்கும் திட்டம் வாகரை பன்னிச்சங்கேணியிலுள்ள ஏர்ன் சிலோன் நிறுவன அலுவலக வளாகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 

இத்திட்டத்தின் சிறப்பம்சமாக  திட்டத்தில் இணைந்து கொண்ட கட்டுமுறிவு, வாகரை, பன்னிச்சங்கேணி மற்றும் ஆலங்குளம் என 4 கிராமங்களை சேர்ந்த சிறுவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒன்றிணைத்து திட்டத்தின் அனுபவ பகிர்வு நிகழ்வென்றினை மேற்கொள்ள ஏர்ன் சிலோன் நிறுவனம் ஆதரவு வழங்கியது. 

இந்நிகழ்வில் திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட 4 கிராமங்களை சேர்ந்த சிறுவர்கள் பெற்றோர்கள் பிரதேச செயலக அதிகாரிகள் சமூக தலைவர்கள் மற்றும் திட்டத்தின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

பெற்றோர்களும் சிறுவர்களுமாக 'படித்த மற்றும் தன்னம்பிக்கை கொண்ட சிறுவர்கள்' எனும் திட்டத்தினால் தம்மிலும் தமது பிள்ளைகளில்  ஏற்பட்டுள்ள நேர்மறையான மாற்றங்கள் மற்றும் தமது பிள்ளைகளில் மேம்பட்டுள்ள திறன்கள் தொடர்பான கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். 

மேலும் 4 கிராமங்களை சேர்ந்த சமூக உறுப்பினர்களும் சிறுவர்களும்  முதல் முறையாக   பழகிக் கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தனர். 

அத்துடன் இத்திட்டமானது புதிய அணுகுமுறைகள் ஊடாக நடைமுறைப்படுத்தப்படுவதால் சிறுவர்கள் மத்தியில் கற்றுக்கொள்வதிலும், இணைந்து செயற்படுவதிலும், விட்டுக்கொடுப்பதிலும், நல்ல தீர்மானங்களை எடுப்பதிலும், தோல்விகளை சமாளித்துக் கொள்வதிலும், உறவுகளுக்கும் உணர்ச்சிகளையும் மதிப்பளிப்பதற்கும் கற்றுக் கொண்டு வருகின்றர் எனவும் பல விடயங்கள் தெரிவிக்கப்பட்டதுடன் இத்திட்டம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் முன்வைக்கப்பட்டன

அத்துடன் இத்திட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வைத்தியர் காந்தா நிறஞ்சன் அவர்களுக்கு பலராலும் நன்றிகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டது

இத்திட்டத்திற்கு லண்டனை சேர்ந்த வைத்தியர் காந்தா நிறஞ்சன் (சிரேஷ்ட வைத்திய ஆலோசகர்-லண்டன்) அவர்கள் நிதி வழங்கிக் கொண்டிருக்கின்றார்

இத்திட்டத்தினை ஏர்ன் சிலோன் நிறுவனம் நடைமுறைப்படுத்துவதுடன் ஈரிடோ நிறுவனம் கூட்டாளராக செயற்பட்டுவருகின்றது. மற்றும் இத்திட்டத்திற்கு கோறளைபற்று வடக்கு பிரதேச செயலகம் தனது ஆதரவினையும் வழங்கி வருகின்றது.