காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட உணவகங்கள், வெதுப்பகங்கள், குளிர்பான நிலையங்கள், பழக்கடைகள், தேனீர் சாலைகள் ஆகிய நிலையங்கள் மீது சுகாதாரப் பரிசோதனை

 
















































மாவட்டத்தில் உள்ள  உணவகங்கள், உணவு கையாளும் நிலையங்களில் சுகாதாரப் பிரிவினர் தொடர்ச்சியான  பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக 8.7.2026 அன்று  காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரிக்குட்பட்ட பகுதியில்  உணவு கையாளும்  நிலையங்களில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டன.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாதிதி. Dr. ஆர். முரளீஸ்வரன் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக ,சுற்றுச் சூழல் தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி Dr. மு. அச்சுதன் அவர்களின் ஒருங்கிணைப்புடன் முன்னெடுக்கப்பட்ட இப்பரிசோதனையில்,

பிரதி பிராந்திய சேவைகள் பணிப்பாள் Dr. கே. மோகனகுமார்,   கிரான் சுகாதார வைத்திய அதிகாரி Dr. சிவலக்‌ஷன்,         பிராந்தியத்திற்கு பொறுப்பான  மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர்கள்  பிராந்திய உணவு ஒளடத பரிசோதகர், மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றனர்.

பரிசோதனைகளின் போது உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய உணவக நிலையங்கள் கண்டறியப்பட்டு அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன்   3 உணவக நிலையங்கள் உடனடியாக மூடப்பட்டது. குறிப்பாக, ஊழியர்களுக்கு மருத்துவச் சான்றிதழ்கள் இல்லாமை மற்றும் சுகாதாரமற்ற சூழலில் உணவுப் பொருட்கள் கையாளப்படுதல் போன்ற குறைபாடுகள் அதிகளவில் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், உணவுப் பொருட்களை கையாளுபவர்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான உணவு கையாளுதல் தொடர்பான தேவையான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. 

 உணவுப் பாதுகாப்பு மற்றும்  தரநிலைகளை உறுதி செய்வதற்காக தொடர்ச்சியான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்கள்  தெரிவித்துள்ளார்.