மட்டக்களப்பு பாரம்பரிய ரோட்டரி கழகத்தினரால் "கற்றல் சூழலை மேம்படுத்த மேசை மற்றும் நாற்காலிகள் வழங்கிவைப்பு*












மாணவர்களின் கற்றல் சூழலை மேம்படுத்தும் நோக்கில், மட்டக்களப்பு பாரம்பரிய ரோட்டரி கழகம் (Rotary Club of Batticaloa Heritage) தனது 2026–2027ஆம் ரோட்டரி ஆண்டிற்கான முதலாவது மக்கள் நலத் திட்டத்தை விசேடமான முறையில் ஆரம்பித்துள்ளது.

“கற்றலுக்கான இடங்களை உருவாக்குதல்” (Creating Spaces for Learning) என்ற அர்த்தமுள்ள கருப்பொருளின் கீழ் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இதன் முதற்கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சுங்கான்கேணி வலம்புரி விநாயகர் வித்தியாலயம், வாழைச்சேனை இந்துக் கல்லூரி மற்றும் சந்திவெளி சித்தி விநாயகர் வித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளுக்கு 100 மேசைகள் மற்றும் நாற்காலிகள் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.

இத்திட்டத்தினை செயற்படுத்துவதற்கு நியூசிலாந்து நாட்டின்  க்றிஸ்ட்சர்ச் சன்ரைஸ் ரோட்டரி கழகம்   (Rotary club of Christchurch Sunrise) நிதி அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் சிறந்து விளங்குவதற்குத் தேவையான வசதியான மற்றும் ஆதரவான கற்றல் சூழல்களை உருவாக்கி இந்த வளங்களின் மூலம் இளம் உள்ளங்களுக்கு உத்வேகம் அளித்து நமது சமூகத்தில் கல்வியின் அடித்தளத்தை வலுப்படுத்தும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.