மட்டக்களப்பு மாவட்டம் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கிரானைச் சேர்ந்த துதானந்தன் பேமஜானு அவர்கள் இலங்கையில் நடைபெற்ற ஆசிய மட்ட மல்யுத்த போட்டியில் 01 ஆம் இடத்தைப் பெற்று தாய்லாந்தில் 02.07.2026 - 05.07.2026 வரை நடைபெறவிருக்கும் 59 கிலோ நிறைப் பிரிவில் கலந்து கொள்வதற்காக நேற்றைய தினம் 01.07.2026 தாய்லாந்து நோக்கி புறப்பட்டு சென்றுள்ளார்
.இலங்கை நாட்டைப் பிரதிநிதிப்படுத்தி 20 வயதிற்குட்பட்ட அணியில் தமிழ்ப் பெண் இவர் மாத்திரமே பங்கு பற்றுகின்றார்.
துதானந்தன் பேமஜானு கிரான் மத்திய மகா வித்தியாலய மாணவி என்பது குறிப்பிடத்தக்கது
இவருடன் மல்யுத்த பயிற்றுவிப்பாளர்.V. திருச்செல்வம் ஆசிரியர் அவர்களும் தாய்லாந்து சென்றுள்ளார்
மல்யுத்த போட்டியில் வென்று நாட்டுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்க்க ஊடகம் தமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது





