
ரணில் விக்ரமசிங்க எப்போதும் தூரநோக்கோடு சிந்தித்து செயற்படுபவர். அதனால் அரசாங்கம் செல்லும் போக்கு நாட்டுக்கு பொருத்தம் இல்லை என்பதை அவர் உணர்ந்துள்ளார். அதனால் மீண்டும் நாட்டுக்காக அவரின் கடமையை செய்ய வேண்டிவரும் என்பதை அவர் விளங்கிக்கொண்டு, நாட்டை கட்டியெழுப்புவதற்கான திட்டத்தையும் தயாரித்துள்ளார் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரு தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்க எப்போதும் இளைஞர்கள் தொடர்பில் எதிர்ப்பார்ப்புடன் இருப்பவர். அவர்தான் ஆசியாவில் முதலாவதாக இளைஞர் அமைப்பை ஏற்படுத்தினார். இளைஞர் விவகார அமைச்சராகவும் அவர் இருந்துள்ளார். ஆனால் இன்று இளைஞர்களுக்கு நாடு தொடர்பில் எதிர்ப்பார்ப்பு இல்லை. அதனால் படித்த இளைஞர்கள் நாட்டைவிட்டு வெளியேறிச் செல்கிறார்கள். இதன்காரணமாக வைத்தியசாலைகளில் வைத்தியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் பணியாற்ற சட்டத்தரணிகள் இல்லை. மின்சார சபையில் பொறியியலாளர்கள் இல்லை.
மீண்டும் நாட்டுக்காக அவரின் கடமையை செய்ய வேண்டிவரும் என்பதை விளங்கிக்கொண்டுள்ளார். 2029 ஆகும்போது நாடு எந்த நிலையில் இருக்கும் என்பதை நாங்கள் விளங்கிக்கொள்வதற்கு முன்னர் அவர் விளங்கிக்கொண்டுள்ளார். அதனால் அவர் நாட்டை மீண்டும் பொறுப்பேற்றால், நாட்டை எவ்வாறு கட்டியெழுப்ப வேண்டும் என்ற திட்டத்தையும் அவர் தயாரித்து முடித்துள்ளார்.




