டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி இயங்கும் பேருந்துகள் மீது காவல்துறை நாடு தழுவிய அளவில் தீவிர நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.சந்தேகத்திற்குரிய வகையில் இயங்கிய சுமார் 100 பேருந்துகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட பேருந்து நடத்துநர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதுடன், மேலதிக விசாரணைக்காக எரிபொருள் மாதிரிகள் பெட்ரோலியக் கூட்டுத்தாபன ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.பேருந்துகளுக்கு மண்ணெண்ணெய் விற்பனை செய்வதைத் தவிர்க்குமாறு எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.





