மட்டக்களப்பு நகரில் பாரிய தீ விபத்து சம்பவம்.




வரதன்

 மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட நகரில் அமைந்துள்ள கைபேசி விற்பனை நிலையத்தில் இன்று அதிகாலை  மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்து சம்பவத்தினால் இருகடைகள் முற்றாக எரிந்து சாம்பல் ஆகி உள்ளதாக மட்டக்களப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்

 இன்று அதிகாலை 4 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் மட்டக்களப்பு மாநகர சபை  தீயணைக்கும் படை பிரிவினர் போலீசார் மேற்கொண்ட மேச்சின் பலனாக தற்போது தீப்பறவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது இதனால் இன்று காலை மற்றும் நகரில் பாரிய போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது

 தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக காத்தான்குடி நகர சபை தீயணைக்கும் பிரிவினரும் வரவழைக்கப்பட்டு தற்போது மட்டக்களப்பு போலீசார் ஏற்பட்ட விபத்து சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

 பாடசாலை நேரம் என்பதால் நகரில் காணப்படுகின்ற தேசிய பாடசாலைக்கு வரும் மாணவர்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டனர் இந்த தீ விபத்து சம்பவத்தினால் தூர இடங்களுக்கான போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டன