நாட்டில் தேங்கிக் கிடக்கும் வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்துவதற்குப் பொதுமக்கள் ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை என்றும், அதில் தவறேதும் செய்த ஊழல்வாதிகளும் படுகொலையாளிகளுமே அச்சமடைந்து எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்றும் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். சட்டத்தின் ஆட்சி முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு குற்றவாளிகளுக்குத் தண்டிப்பு கிடைப்பதையே நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர் எனச் சுட்டிக்காட்டிய அவர், எவ்விதத் தலையீடுகளுமின்றி நீதியை நிலைநாட்டும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.





