தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் பாரிய பரிசோதனை முன்னெடுப்பு

 

 









 

வரதன்

 

 

சுகாதார அமைச்சினால் கிழக்கு மாகாணத்தில் டெங்கு நோய் பரவுதல் தடுக்க தேசிய டெங்கு ஒழிப்பு  வாரத்தை முன்னிட்டு இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலும் பாரிய பரிசோதனை முன்னெடுப்பு

 நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் தீவிரமாக பரவி வருவதை முன்னிட்டு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்திலும் இன்று மாவட்ட பிராந்திய சுகாதார சேவை திணைக்களம் மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ராணுவத்தினர் மற்றும் போலீசார் மாவட்ட செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் இணைந்து இன்று மட்டக்களப்பு நகரில் பாரிய டெங்கு சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்

 மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி ஈ உதயகுமார் தலைமையில் இன்று டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்ட   மாமாங்கம் புதூர் கல்லடி  வேலூர் இடங்களில் இந்த விசேட டெங்கு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது

 இதன்போது டெங்கு குடம்பிகள்  காணப்பட்ட 40 வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது