மட்டக்களப்பில் தொடரும் காட்டு யானைகளின் அட்டகாசம் .

 

 





 

 ந.குகதர்சன் 

   மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப்பிரதேச செயலாளர் பிரிவில் யானைகளின் அட்டகாசத்தால் தென்னை மற்றும் பயன்தரும் மரங்கள் சேதமடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

 வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் புனாணை கிழக்கு கிராம சேவகர் பிரிவில் ஆலங்குளம் கண்டத்தில் மேவாண்ட குளப்பகுதியில் உட்புகுந்த காட்டு யானைகள் தென்னை மரத்தோட்டங்களிலுள்ள 48 தென்னை மரங்களை சேதப்படுத்தியுள்ளது. இதில் ஒரு தோட்டத்தில் நாற்பது தென்னைகளையும் மற்றுமொரு தோட்டத்தில் எட்டு தென்னைகளையும் சேதப்படுத்தியுள்ளது.

தங்களது நேரத்தையும் பொருளாதாரத்தையும் ஐந்து வருடங்கள் செலவழித்து பயன்பெறக்கூடிய இச்சந்தர்ப்பத்தில் யானைகளின் அட்டகாசத்தால் சேதமாக்கப்படுவது மிகவும் கவலையாகவுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காட்டு யானைகளின் அச்சுறுத்தல்களுக்கு நிரந்தரத்தீர்வினைப் பெற்றுத்தருமாறும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.