கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்பு அமைச்சினால் தொடர்ச்சியாக டெங்கு விழிப்புணர்வு செயற்பாடுகள் முன்னெடுப்பு










வரதன்



 ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்க அமைவாக கிழக்கு மாகாணத்தில் மாகாண ஆளுநரின் உத்தரவு அமைய டெங்கு குடம்பிகள் பரவக்கூடிய  நீர் நிலைகள்  காணப்படுகின்ற இடங்களை இனம் கண்டு அவற்றை சுத்தப்படுத்தும் செயற்திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

 இதேவேளை மட்டக்களப்பு வான் படை வீரர்களால் முன்னெடுக்கப்பட்ட டெங்கு சிரமமான நிகழ்வு இன்று மட்டக்களப்பு வாவி வீதியில் வான் படை முகாமின் கட்டளையிடும் பொறுப்பதிகாரி வின்குமாண்டர் பாலசூரிய தலைமையில் இடம் பெற்றது

 இதன் போது வாவிக்கரை வீதியின் இரு மருங்கிலும் காணப்பட்ட டெங்கு குடம்பிகள் உருவாக கூடிய கழிவு பொருட்கள் குப்பைகள் பிளாஸ்டிக் பொருட்கள் என்பன சேகரிக்கப்பட்டு அப்பகுதி சுத்தப்படுத்த சேர்த்து திட்டம் வான் படை சேர்ந்த  அதிகாரிகள் வீரர்களால் முன்னெடுக்கப்பட்டது