மட்டக்களப்பு நகரில் உள்ள நீரூற்று பூங்காவில் அமைந்துள்ள முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது



















மட்டக்களப்பு நகரில் உள்ள நீரூற்று பூங்காவில் அமைந்துள்ள முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் திருவுருவச்சிலைக்கு மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் கலாநிதி அ.செல்வேந்திரன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம்பாக்கியநாதன் மற்றும் சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் சபை கௌரவதலைவர், க.பாஸ்கரன் ,சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் சபை பொதுச் செயலாளர்,ச.ஜெயராஜா கலந்து கொண்டு அடிகளாரின் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்தனர் . அதனைத் தொடர்ந்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டு வின்சன்ட் உயர்தர மகளீர் தேசிய பாடசாலை மாணவிகளினால் ''வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ'' பாடல் பாடப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில்

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி, இந்துக் கல்லூரி, மகாஜன கல்லூரி, புனித மிக்கேல் கல்லூரி மற்றும் ஆணைப்பந்தி இந்து மகளீர் கல்லூரி ஆகியவற்றின் மாணவ மாணவிகளும் சுவாமியின் பற்றாளர்கள் , பக்தர்கள் அடிகளாரின் திருவுருவச்சிலைக்கு மரியாதை செலுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.