மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் துரித முயற்சியினால் அண்மையில் உடைந்து விழுந்த பாலத்திற்கு பதிலாக தற்காலிக பாலம் அமைக்கும் பணிகள் நேற்று மாலை முடிவடைந்ததன் பின்பு இன்று காலை 9 மணி அளவில் மீண்டும் மக்களின் போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது
வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் சுமார் 3.5 மில்லியன் ரூபாய் செலவில் இந்த தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது
இருப்பினும் இந்த வீதியினை பயன்படுத்தும் பொதுமக்கள் பாலத்திற்கு முன்பு வழங்கப்பட்டுள்ள வீதி அறிவுறுத்தல்களை பின்பற்றி இப் பாலத்தின் ஊடாக மிகவும் அவதானமாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்
வழமை போன்று புதிய பாலம் ஒன்று அமைக்கும் வரை கனரக வாகனங்கள் இப்பாதையை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு மட்டக்களப்பு போக்குவரத்து போலீசார் சாரதிகளுக்கு தெரிவித்துள்ளனர்.
இன்று இடம்பெற்ற நிகழ்விற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவின் பிரதிநிதியாக தேசிய மக்கள் சக்தியின் மட்டு மாநகர சபை உறுப்பினர் எம் உதயராஜ் பிரஜா சக்தி உறுப்பினர்கள் அரச உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்
.jpeg)


.jpeg)

.jpeg)

.jpeg)





