கிழக்கு மாகாணத்தில் காரைதீவில் பிறந்து வடக்கில் தடம் பதித்த உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் சிலை இன்று வடக்கில் திறந்து வைக்கப்பட்டது.
யாழ். மானிப்பாய் - காரைநகர் வீதியில் யாழ்ப்பாணம் நுழைவாயலில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.
வடக்கையும், கிழக்கையும் ஆன்மீகத்தால் முத்தமிழால் கல்விப் பணிகளால் இணைத்தவர் ஈழம் தந்த சைவத்தமிழ் பெரியார் சுவாமி விபுலானந்த அடிகளார்.
கிழக்கின் முதன்மை ஆதீனமான தென் கயிலை ஆதீனம் அகத்தியர் அடிகளாரால் இச் சிலை திறந்து வைக்கப்பட்டது.