விக்டோறியா கல்லூரி தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம்.









ஒக்டோபர் 10 சர்வதேச உளநல தினத்தை முன்னிட்டு கொழும்பு MIU பல்கலைக்கழகம் மற்றும்  மட்டக்களப்பு சர்வதேச.
உளவியல்சார் கற்கைகள் பிராந்திய நிலையம் என்பன இணைந்து அகில இலங்கை ரீதியாக பாடசாலைகளுக்கிடையில் கட்டுரைப் போட்டியை நடார்த்தியது.

"உலக மனநல கூட்டமைப்பின் அவசியம்"

எனும் தலைப்பில் நடாத்திய  கட்டுரைப் போட்டியில், வலிகாமம்  வலயக்கல்விப் பணிமனைக்கு உட்பட்ட (வடக்கு மாகாணம்)  யா/விக்டோறியா கல்லூரியில் தரம் 13 கணிதப் பிரிவில்   கல்வி பயிலும் மாணவன்  செல்வன். சோமலோஜன் திலக்ஷன் தேசிய மட்டத்தில் 2ஆம் இடத்தைப் பெற்றிருந்தார்.

 வெற்றி பெற்ற மாணவனை பாராட்டி கௌரவிக்கும் ஒழுங்கமைப்பினை MIU பல்கலைக்கழகம் மேற்கோண்டதற்கு அமைவாக இன்று (24.10.2025) மேற்படி பாடசாலையில்  அதிபர், திருமதி. K. Sulabhamathy தலைமையில் நிகழ்வு இடம் பெற்றது. 

 இந்நிகழ்வின் போது     பாடசாலை உயர்தரப் பிரிவு பகுதித் தலைவர் திரு. அ. அஜித்குமார் அவர்கள் கலந்து கொண்டு உளவியல் விருது, சான்றிதழ் உட்பட பணப் பரிசினையும் மாணவனுக்கு வழங்கிவைத்தார்.