.
3வது ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் பங்குபற்ற பஹ்ரைன் செல்லும்
மட்டக்களப்பை சேர்ந்த மாணவன் சஞ்ஜீவன் டிருஷாந்தை வாழ்த்தினார்
மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் தினகரன் ரவி .
மட்டக்களப்பு
கல்லடி உப்போடை சிவானந்த வித்தியாலய மாணவன் சஞ்ஜீவன் டிருஷாந் மத்திய
கிழக்கு பஹ்ரைன் நாட்டின் தலைப்பட்டினம் மனாமாவில் நடை
பெற்றுக்கொண்டிருக்கும் 3வது ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் 16
வயது- 60கிலோ பிரிவுக்கு உட்பட்ட மல்யுத்தப்போட்டியில் பங்கு பற்றுவதற்காக
பஹ்ரைன் பயணமாக உள்ளார் .
அதனை முன்னிட்டு இன்றைய தினம் மட்டக்களப்பு
வலயக்கல்வி பணிப்பாளர் தினகரன் ரவி அவர்கள் மாணவன் டிருஷாந்தை தனது
பணிமனையில் வரவேற்று வாழ்த்தி ,ஆசிவழங்கினார் .
அகில இலங்கை ரீதியில்
மல்யுத்தப்போட்டிக்கு பஹ்ரைன் செல்லவிருக்கும் 10 பேர் கொண்ட குழுவில்
5.மாணவர்களும் 5. மாணவிகளும் அடங்குகிறார்கள் . இதில் அகில இலங்கை
ரீதியில் பாடசாலை மட்ட மல்யுத்தப்போட்டியில் 2024மற்றும் 2025வருடங்களில்
தேசிய ரீதியில் தங்கப்பதக்கம் வென்ற ஒரே மாணவன் டிருஷாந் என்பது
குறிப்பிடத்தக்கது .
மாணவன் டிருஷாந்தினால் சிவானந்த வித்தியாலயம் பெருமை கொள்கிறது , அதே சமயம் பயிற்றுவிப்பாளர் திருச்செல்வத்தின் கடுமையான உழைப்பும் ,விடாமுயற்சியும் இங்கு பாராட்டப்படவேண்டியதொன்றாகும் .
மட்டக்களப்பு நொச்சிமுனையை சேர்ந்த வேலு திருச்செல்வம் இலங்கை இளைஞர் அணியின் மல்யுத்த பயிற்றுவிப்பாளராக பணியாற்றுகிறார்.
அவரின் தலைமையிலேயே மல்யுத்த போட்டியாளர்கள் செல்ல உள்ளனர்
இன்றைய
தினம் மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் பணிமனையில் டிருஷாந்திற்கு
வாழ்த்து தெரிவித்து ஆசி வழங்கும் தருணத்தில் திருமதி ஷாமினி ரவிராஜா
பிரதிகல்விப் பணிப்பாளர் (நிர்வாகம் ), N. குகதாசன் பிரதிகல்விப்
பணிப்பாளர் (அபிவிருத்தி) ,மண்முனை வடக்கு கோட்ட கல்விப்பணிப்பாளர்
J.பிரபாகரன் மற்றும் சிவானந்த வித்தியாலய அதிபர் S.தயாபரன் ஆகியோரும்
சமூகமளித்திருந்தார்கள். .
செய்தி ஆசிரியர்