“நிலையான சமாதானத்திற்கான நல்லிணக்கத்தை கட்டி எழுப்புவோம்” – கதிர்காம பாத யாத்திரை


















































































“நிலையான சமாதானத்திற்கான நல்லிணக்கத்தை கட்டி எழுப்புவோம்” எனும் தொனிப்பொருளில் கதிர்காம பாத யாத்திரை கடந்த மூன்று வருடங்களாக இடம்பெற்றுவந்த நிலையில் இவ்வருடம் நான்காவது தடவையாக பாத யாத்திரையினை முன்னெடுக்கப்பட்டது 

அதனை முன்னிட்டு இவ்வருடத்திற்கான பாத யாத்திரையானது தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் சுபுண் விஜயரெட்ணவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் (நிருவாகம்) மனுல சமன் பெறேரா மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் அபிவிருத்திப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் அஜந்த ஆகியோரது தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உதவிப் பணிப்பாளர் திருமதி.நிஷாந்தி அருண்மொழி மற்றும் மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர்
மா.சசிகுமார் ஆகியோரது ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து யாத்திரையில் கலந்து கொள்ளும் இளைஞர்களுக்காக உருத்திராட்சம் மாலை அணிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் யாத்திரைக்கு பொருத்தமான காவி உடைகள் என்பன வழங்கப்பட்டதனைத் தொடர்ந்து, உகந்தை முருகன் ஆலயம் வரைக்குமான பஸ் பயணம் நேற்று  (09) திகதி காலை 9.30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சர்வமத தலைவர்கள், மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் ஏ.ஹமீர், ஜெய்க்கா நிறுவனத்தின் பிரதிநிதி அருந்தசா, உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாதியாத்திரியர்களை வழியனுப்பி வைத்திருந்தனர்.

பாதயாத்திரை செல்லும் வழிகளில் சுற்றாடல் பாதுகாப்பு, போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மற்றும் மனித உரிமைகள் போன்ற மனிதநலன் சார்ந்த செயற்திட்டங்களிலும் இளைஞர்கள் ஈடுபடவுள்ளனர்.

கதிர்காம எசல திருவிழாவை முன்னிட்டு இடம்பெறும் இப்பயணம், நாட்டின் பல்லின கலாச்சாரங்களைப் பேணிப் பாதுகாப்பதையும், நிலையான சமாதானத்தை இளைஞர்கள் மத்தியில் விதைப்பதையும் இலக்காகக் கொண்டுள்ளது.