மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட அடையாள அட்டைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரச நிறுவனங்களில் அவர்களுக்கு முன்னுரிமை சேவைகளை வழங்குவதற்காக இந்த அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய சபை இதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் உபாலி பன்னிலகே தலைமையில், இடம்பெற்ற நிகழ்வில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மாற்றுத்திறனாளிகளை விளிக்கும்போது, பயன்படுத்தப்பட வேண்டிய சொற்களஞ்சியத்தை உத்தியோகபூர்வ மொழிகள் திணைக்களத்துடன் இணைந்து வெளியிடவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





