பாவிக்கப்பட்டு மாசுபட்ட ஊசிகள் மீண்டும் பயன்படுத்த்தியதால் , 78 சிறுவர்கள் எச்.ஐ.வி தொற்று.

 


பாவிக்கப்பட்டு மாசுபட்ட ஊசிகள் மீண்டும் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், 78 சிறுவர்கள் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை தெரிய வந்துள்ளதாக பாகிஸ்தானின் சிந்து மாகாண தொழில் அமைச்சர் சயீத் கனி குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானின் சிந்து மாகாண அரச மருத்துவமனை ஒன்றில் இச்சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இதற்கு பொறுப்பானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறுகையில், இந்தத் துயரத்தை எதிர்கொள்ள பாதிக்கப்பட்ட சிறுவர்களின் குடும்பங்களை சிந்து மாகாண அரசாங்கம் தனியாக விடாது என்பதை நாங்கள் உறுதியாகக் கூறுகின்றோம். அவர்களுக்குரிய முழுமையான மருத்துவ சிகிச்சையை நாங்கள் உறுதி செய்வதோடு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவோம். யாரோ ஒருவரின் தரப்பில் அலட்சியம் நிகழ்ந்திருந்திருக்க வேண்டும் என்றுள்ளார்.

இதேவேளை சிந்து உயர் நீதிமன்றம், ‘பாதுகாப்பான மருத்துவ சிகிச்சையை வழங்குவது சட்டப்பூர்வ கடமையாகக் கொண்ட குறித்த மருத்துவமனையில், இந்நோய் பரவல் ஏன் ஏற்பட்டது என்பதை விளக்கும் அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு அரசாங்கத்திற்கு காலக்கெடு விதித்துள்ளது.