இலங்கையில் முதன்முறையாக ஒரே நேரத்தில் 6 பயணிகள் வரை ஏற்றிச் செல்லக்கூடிய அதிநவீன ட்ரோன் விமான சேவைத் திட்டம் ஆரம்பிக்க நடவடிக்கை

 


இலங்கையில் முதன்முறையாக ஒரே நேரத்தில் 6 பயணிகள் வரை ஏற்றிச் செல்லக்கூடிய அதிநவீன ட்ரோன் விமான சேவைத் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.
இந்தத் திட்டம் ஒரு முன்னோடித் திட்டமாக இலங்கையில் செயல்படுத்தப்படவுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தமிந்த ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சீனா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் ஏற்கனவே வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த நவீன போக்குவரத்துத் திட்டம், தற்போது இலங்கையிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.