வரதன்
சொந்தமாக இருக்க இடம் ஒரு அழகான வாழ்க்கை எனும் தேசிய வீட்டு வசதி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் தேசிய வீடு அமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 55 பயனாளிகளுக்கு கட்டம் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு முதற்கட்ட காசோலை வழங்கி வைக்கும் நிகழ்வு
மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர்T. சுபாஸ்கரன் தலைமையில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கலந்து கொண்டு வீட்டு திட்டத்திற்கான 1 லட்சம் ரூபா வீதம் காசோலைகளை வழங்கி வைத்தார்
மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் அருள்ராஜ் தேசிய வீடு அமைப்பு அதிகார சபையின் உயர் அதிகாரிகள் தேசிய மக்கள் சக்தியின் மாநகர சபை உறுப்பினர்கள் பயனாளிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்

.jpeg)



.jpeg)







