சிரியாவில் பயணிகள் பேருந்தொன்றும்,
உள்நாட்டுப் பாதுகாப்புப் படையினரை ஏற்றிச் சென்ற பேருந்தொன்றும் நேருக்கு
நேர் மோதிக்கொண்டதில் குறைந்தது 35 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கோர விபத்தில் பலர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் அவசர சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருபவர்களில் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
விபத்துக்கான காரணம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.





