வரதன்
மாவட்டத்தில் கடந்த மாதம் 27 பேருக்காக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இ உதயகுமார்
மாவட்டத்தில் தேவையான அளவு மக்களுக்கான விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டுள்ள போதிலும் இனி பொது மக்களுக்கான மன்னிப்பு வழங்க படமாட்டாது
இனி முன்னெடுக்கப்படும் பரிசோதனைகளில் டெங்கு குழம்பி காணப்பட்டால் நேரடியாகவே சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
டெங்கு நோய் தாக்கத்தை தடுக்காவிடில் பாரிய உயிரிழப்புகளை சந்திக்க வேண்டி வரும் வைத்திய சாலையில் அதிகமான நோயாளிகளை அனுமதிக்கின்ற போது அவர்களுக்கான தீவிர கண்காணிப்பு சிகிச்சை அளிப்பதில் தாமதங்கள் ஏற்படலாம் இதனால் உயிரிழப்புக்களை தடுக்க முடியாமல் போகும்
எனவே அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தந்து இதனை கட்டுப்படுத்த முன் வரவேண்டும் மாவட்டத்தில் அதிகமாக மூடி கிடக்கின்ற வீடுகள் வெற்று காணிகளில் டெங்கு குழம்பிகள் அதிகம் காணப்படுகின்றன இவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது
வீடுகளில் நீர் தேங்க கூடிய இடங்களை சுத்தப்படுத்த வேண்டியுள்ளதுடன் கிணறுகளில் மீன்களை வளர்க்க வேண்டும் இவ்வாறான செயற்பாடுகள் மூலம்தான் இந்த நோய் பரவுதலை கட்டுப்படுத்த முடியும் என
மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி ஈ உதயகுமார் மாவட்டத்தின் டெங்கு நிலைமை சம்பந்தமாக இவ்வாறு ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவித்தார்





