ஆற்றில் நீராடச் சென்ற மாணவர்களில் ஒருவர் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நுவரெலியா - லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வோல்ட்றீம் தோட்டத்தில் இன்று(13.07.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் லிந்துலை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 10ஆம் வகுப்பு கல்வி பயிலும் மாணவன் என ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பரீட்சை முடிந்தவுடன், நண்பர்களுடன் சேர்ந்து ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்ற வேளையில், எதிர்பாராத விதமாக ஆற்றில் மூழ்கியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் மாணவருடன் மொத்தம் பத்து மாணவர்கள் ஆற்றுப் பகுதிக்கு சென்றிருந்ததாகவும், அவர்களில் குறித்த மாணவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்தவுடன் லிந்துலை பொலிஸார், பிரதேசவாசிகள் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, சுழியோடிகளின் உதவியுடன் ஆற்றில் தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
See less





