உகந்தமலையிலிருந்து வி.ரி. சகாதேவராஜா)
கிழக்கின் தென்கோடியிலுள்ள வரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தமலை ஸ்ரீ
முருகனாலயத்திலிருந்து நேற்று
கதிர்காமத்திற்கு காட்டுப்பாதை ஊடாக சுமார் 10 ஆயிரம் அடியார்கள் காட்டுக்குள் இறங்கினர்.
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சீதாராம் குருகங முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது.
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மஞ்சுள, பிரியந்த, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெக ராஜன் கிழக்கு மாகாண கலாச்சார பண்பாடு துறை பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமார் உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்து கொண்டார்கள்
எங்கு பார்த்தாலும் அடியார்கள் மயம்.
சில மடங்களும் நிரம்பி மரங்களின் கீழ் அநாயாசமாக அவர்கள் நேற்றும்
ஓய்வெடுத்தனர். அதேவேளை பஸ்களிலும் நடந்தும் ஆயிரமாயிரம் அடியார்கள்
வந்திறங்கிய வண்ணம் உள்ளனர்.
ஆலய வளாகத்தில் தேவையான அன்னதானங்கள் தினமும் வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றன. போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது என்றும் வண்ணங்கர் சுதா கூறினார்.





