நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று திங்கட்கிழமை (06) காலை மீண்டும் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.

 


இலங்கையில் நீர்க்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. காயமடைந்த 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நீர்க்கொழும்பு மாவட்ட மருத்துவமனையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

அவர்களில் சிலர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மோதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் அதிகாரிகளும் அடங்குவர் என நீர்கொழும்பு மருத்துவமனையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு புறநகர் பகுதியில் அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டிருந்தது.

இந்த மோதல் சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்திருந்ததுடன், மேலும் 34 பேர் காயமடைந்திருந்தனர்.

இவ்வாறு காயமடைந்த கைதிகள் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த மோதல் சம்பவத்தில் காயமடைந்த இருவர் கவலைக்கிடமான நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.