மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயால் உயிர் இழப்புக்களை தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியம் தவறுவோர் மீது உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்- மாவட்ட அரசாங்க அதிபர் J..S. அருள் ராஜ்

  

 


வரதன்

 

மட்டக்களப்பு மாவட்டத்தில்  டெங்கு நோயால் உயிர் இழப்புக்களை தடுக்க  பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக முக்கியம் தவறுவோர் மீது உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்- மாவட்ட அரசாங்க அதிபர் J..S. அருள் ராஜ்

 சுகாதார அமைச்சினால் அதிகம் டெங்கு நோய் பரவும் மாவட்டங்களில் ஒன்றாக மட்டக்களப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால் இனங்காணப்பட்ட மன் முனை  வடக்கு மற்றும் கிரான் பிரதேச செயலக பிரிவுகளிலும்  விசேட டெங்கு ஒழிப்பு செயற்திட்டம் தொடர்ச்சியாக முதன்மைப் படுத்தி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

 பொதுமக்கள் தங்களது வீடுகளை தாங்களே துப்புரவு செய்ய வேண்டிய தேவை உள்ளது ஏனைய மாவட்டங்களில் வைத்தியசாலைகளில் நோயாளிகளில் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றதை காண கூடியதாக உள்ளது

 இதே நிலைமை காணப்பட்டால் மட்டக்களப்பு மாவட்டத்திலும் அவ்வாறான நிலைமை ஏற்படும் இதனை தனியாகவே சுகாதாரத் தரப்பினரால் மட்டும் முன்னெடுக்கக்கூடிய செயல் திட்டம் அல்ல எனவே

 பொதுமக்கள் சகல அரச திணைக்களங்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டிய தேவை உள்ளது அப்போதுதான் இதனை பூரணமாக கட்டுப்படுத்த முடியும் இனம் காணப்பட்ட இடங்களை துப்புரவு செய்வதன் மூலம் நோயாளிகள் உருவாகுவதை தவிர்க்க முடியும்

 வைத்தியசாலைகளில் அதிக டெங்கு நோயாளர்கள் அனுமதிக்கப்படும்போது உயிரிழப்புக்களும் ஏற்பட வாய்ப்பு உண்டு இதற்கு போலீசார் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டிய தேவை உள்ளது அப்போதுதான் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்

 என மாவட்டத்தின் டெங்கு நிலைமை தொடர்பாக ஊடகங்களுக்கு இவ்வாறு அரசாங்க அதிபர் கருத்து தெரிவித்தார்