மட்டக்களப்பு, கல்லடியைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளரும், சமூக செயல்பாட்டாளருமான ஏரம்பமூர்த்தி கங்காதரன் அவர்களுக்கு, மனிதாபிமான மனித உரிமைகள் அமைப்பினால் "தேசபந்து" என்ற மரியாதைக்குரிய சமூகவியல் கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் (20/06/2026) கல்லடி 'கிறீன் கார்டன்' (Green Garden) விடுதியில் நடைபெற்ற விசேட நிகழ்வின் போதே இவருக்கு இந்த உயரிய கௌரவம் வழங்கி வைக்கப்பட்டது.
சமூக மேம்பாட்டிலும், ஊடகத்துறையிலும் அவர் ஆற்றி வரும் அர்ப்பணிப்புமிக்க சேவையைப் பாராட்டியே இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.
சமூகத்தின் குரலாக ஒலிக்கும் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏரம்பமூர்த்தி கங்காதரன் அவர்கள், இந்த உயரிய அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டமைக்காக எமது ஊடகம் (Battimedia.lk) தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.






